எம்.பி சீட் மற்றும் மத்திய அரசுப்பணி வாங்கித்தருவதாகக் கூறி, கர்நாடகாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபடுவதாக, சிபிசிஐடி காவல்துறைக்கு புகார்கள் வந்தன. மேலும், அரசு வேலை கிடைத்தது போல பிரதமர், ஆளுநர் அலுவலக இ-மெயில் போன்று போலியாக உருவாக்கி, அதிலிருந்து போலி நியமன ஆணைகளை அந்த மோசடிக் கும்பல் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட மைசூரைச் சேர்ந்த மகாதேவய்யா (54), அவரது மகன் அங்கித் (29) மற்றும் ஓசூரைச் சேர்ந்த ஓம் (34) ஆகிய மூவரையும், சிபிசிஐடி தனிப்படையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இன்று அதிகாலையில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இம்மூவர் பெயரில் 7 வங்கிகளில் உள்ள கணக்குகளை முடக்கவும் சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மகாதேவய்யா மீது டெல்லி மற்றும் சென்னையில் மோசடி வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் உலா வரும் போலி கணக்கு: ரோஜா சீரியல் நடிகை புகார்