கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஹலகுரு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் காரில் பெங்களூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அந்த கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தீ பற்றி எரிந்தது.
இந்த விபத்தில், காரிலிருந்து ஷேக் பைசல் (44), மெஹக் (33), ஷேக் ஆயில் (11) ஆகியோர் உயிரிழந்தனர்.
மற்ற இருவரும் படுகாயமடைந்த நிலையில், பெங்களூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
![கார் விபத்து: 3 பேர் தீயில் கருகி உயிரிழப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12:34:15:1622790255_kn-mnd-04-02-car-basma-avb-ka10026_04062021091622_0406f_1622778382_26_0406newsroom_1622779747_346.jpg)
இதனையடுத்து அங்கு சென்ற வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடந்தி வருகின்றனர்.