சென்னை: பெருநகர சென்னையில் போதைத் தடுப்புக்கான நடவடிக்கையாக கஞ்சா, போதைப்பொருள் கடத்திவருபவர்களையும் விற்பனை செய்வோரையும் கண்டறிந்து கைதுசெய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாகக் கண்காணித்து கஞ்சா, போதைப்பொருள்களைக் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கைதுசெய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் கடந்த மூன்று நாள்களாகத் தனிப்படை காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா கடத்திவந்து பதுக்கிவைத்து விற்பனை செய்தது தொடர்பாக இதுவரை 68 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 107 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 50 கிலோ 123 கிராம் கஞ்சா, விற்பனைக்குப் பயன்படுத்திய மூன்று சக்கர வாகனங்கள், ரொக்கப்பணம் 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது.
மேலும், சென்னை பெருநகர காவல் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால் சட்டவிரோதமாக கஞ்சா, போதைப்பொருள் கடத்திவருபவர்கள், விற்பனை செய்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் இந்துக்கள் விரைவில் சிறுபான்மையினராக மாறுவர் - தொகாடியா கவலை