ETV Bharat / crime

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 4.60 கோடி கடன் பெற முயன்ற தொழிலதிபர் கைது! - தொழிலதிபரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை

சென்னை : போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூபாய் 4.60 கோடியை ஏமாற்றிய தொழிலதிபரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 4.60 கோடி கடன் பெற முயன்ற தொழிலதிபர் கைது!

author img

By

Published : Mar 4, 2021, 2:27 AM IST

சென்னை மவுண்ட் ரோடு பெடரல் வங்கி கிளையின் உதவி துணை தலைவரான ஜோஸ்மான் டேவிட் என்பவர் காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “நங்கநல்லூரில் ஏ டூ இஸட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை நடத்திவருபவர் ரமேஷ் (51). அவர் ஸ்வஸ்திக் அசோசியேட்ஸ் என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்கி கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் கோட்டாக் மஹிந்திரா வங்கியில் ரூ. 2 கோடி கடன் பெற்றுள்ளதாகக் கூறினர்.

கோட்டாக் மஹிந்திரா வங்கியில் உள்ள 2 கோடி ரூபாய் கிரெடிட் லோனை எங்களது வங்கி கிளைக்கு மாற்றித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அத்துடன், எங்களது நிறுவனத்திற்கு 8 லாரியை வாங்கப் போவதாக கூறி அதற்கான ஆவணங்களையும், சொத்து பத்திரங்களையும் சமர்பித்தனர்.

போலி ஆவணங்கள் மூலம் ரூ. 4.60 கோடி கடன் பெற முயன்ற தொழிலதிபர் கைது!
போலி ஆவணங்கள் மூலம் ரூ. 4.60 கோடி கடன் பெற முயன்ற தொழிலதிபர் ரமேஷ், அவருக்கு உதவியாக இருந்த ரவிந்திரன்

பின்னர் அவர்கள் கொடுத்த பத்திரங்களை ஆய்வு செய்தபோது, ஏற்கனவே ஒரு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கியதை மறைத்து புதிதாக எங்கள் வங்கியில் அடமானம் வைப்பது போல் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தது தெரியவந்தது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். இதனையடுத்து 4.60 கோடி ரூபாயை ஏமாற்றிய நங்கநல்லூரைச் சேர்ந்த ரமேஷ், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த சேப்பாக்கத்தை சேர்ந்த ரவிந்திரன் (41) ஆகிய இருவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தனர்.

பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : அனுமதியின்றி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கிகள் - வெடிமருந்துகள் பறிமுதல்: 2 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.