பெங்களூர் (கர்நாடகா): ஹெப்பகோடி அருகே ஷிகரிபல்யாவைச் சேர்ந்த வாசி முகமது அப்பாஸின் மகன் ஆசிப் ஆலம் (10). இந்த சிறுவன் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
பின்னர் அச்சிறுவனின் தந்தையிடம் கடத்தல்காரர்கள் ரூ.25 லட்சம் பணம் கேட்டுள்ளனர். இதுகுறித்து உடனே அவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அப்புகாரின் பேரில் காவல்துறையினரும் கடத்தல்காரர்களை தீவிரமாக தேடியுள்ளனர்.
காவல்துறையினர் தேடுவதை அறிந்த கடத்தல்காரர்கள் அந்த சிறுவனின் தலையில் கல்லைப் போட்டு நசுக்கி கொலை செய்துவிட்டு சத்தீஸ்கருக்கு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து தேடுதல் பணியில் இருந்த பெங்களூர் காவல்துறையினர் அவர்களிடமிருந்து வந்த தொலைபேசி எண்ணை வைத்து கடத்தல்காரர்கள் ராய்பூரில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
பின்னர் ராய்பூர் காவல்துறைக்கு தொடர்புகொண்டு, அவர்களது உதவியுடன் இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முகமது ரிஸ்வான், முகமது சிராஜ், முகமது நவுசாத் ஆகியோரை திக்ராபரா பகுதியில் கைது செய்துள்ளனர். தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பெங்களூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: '9.27 லட்சம் குழந்தைகளுக்கு மோசமான ஊட்டச்சத்து குறைபாடு' ஆர்டிஐ தகவல்!