சென்னை: மண்ணடி இப்ராகிம் சாகிப் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் செல்வகணி. பர்மா பஜாரில் கடை வைத்துள்ளார். இவரது மனைவி யாஸ்மின். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவரின் ஒன்றரை வயதான மூன்றாவது குழந்தை ஆசியா நேற்றிரவு மூன்றாவது மாடி பால்கனியில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது பால்கனி கம்பியில் ஏறி 3ஆவது மாடியில் இருந்து கீழே எட்டிபார்த்தபோது, அங்கிருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக குடும்பத்தினர் குழந்தையை சிகிச்சைக்காக மண்ணடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
தகவலறிந்த வடக்கு கடற்கரை காவல் துறையினர், குழந்தையின் உடலை உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 5 மாதக் குழந்தை கடத்தல் - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை