ஆந்திரா: திருநங்கை ஒருவரை 15 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், திருநங்கையை புதரில் தூக்கி வீசியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சக திருநங்கைகள் திஷா ஆப் மூலமாக மகளிர் போலீசாரை தொடர்பு கொண்டபோது, புலிவேந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட திருநங்கைக்கு நீதி கிடைக்காவிட்டால், அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம் என சக திருநங்கைகள் எச்சரித்துள்ளனர்.
தங்களுக்கும் இந்த சமூகத்தில் வாழ உரிமை இருப்பதால், உரிய நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தனர்.