ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் எட்மாதூர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் 19 வயதான இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் தாய் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் பைக்கை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி கணவர் கண்முன்னே பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும், பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியையும், ரூ.10 ஆயிரம் பணத்தையும் பறித்துச் சென்றனர்.
இது குறித்து பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இது குறித்து காவலர்கள் தரப்பில் கூறுகையில், “பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் கவுரி ராஜ்புத் மற்றும் மோனு ஆகும். ஒருவரின் பெயர் அடையாளம் தெரியவில்லை.
மூவர் மீது கூட்டு பாலியல் வன்புணர், காயம் ஏற்படுத்துதல், கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளார்” என்றனர். ஆக்ரா பகுதியில் பெண் ஒருவர் கணவர் கண்முன்னே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : 'என் அப்பாவின் மரணத்திற்கு நீதி கேட்கவே பரப்புரையில் ஈடுபடுகிறேன்' - காடுவெட்டி குருவின் மகள்