ETV Bharat / crime

சிவனும் பார்வதியும் ஆடும் போது உருவான இரிடியம்! - நடிகை ஜெயசித்ரா மகன் கைது பின்னணி! - இசையமைப்பாளர் அம்ரிஷ் கைது

சென்னை: சிவனும் பார்வதியும் நடனமாடும் போது வரக்கூடிய இடி மின்னல் மூலம் உருவான இரிடியம் எனக்கூறி தன்னிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக இசையமைப்பாளர் அம்ரீஷ் மீது தொழிலதிபர் புகாரளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

amrish
amrish
author img

By

Published : Mar 17, 2021, 10:53 PM IST

பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனும், ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவருமான நடிகர் அம்ரீஷ், இரிடியத்தை அதிக லாபத்திற்கு விற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும் தொழிலதிபருமான நெடுமாறன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில், “நடிகர் அம்ரீஷ் அரியவகை இரிடியம் உள்ளதாகவும், அதை மலேசியாவில் உள்ள ஒரு நிறுவனம் 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக உள்ளதாகவும் கூறினார். பெரம்பலூரில் உள்ள பாலாயி அம்மன் கோயில் கலசத்தில் இருந்து எடுக்கப்பட்ட அந்த இரிடியத்தை, பெரம்பலூரை சேர்ந்த முக்கிய நபர்களுக்கும், அதனை மலேசியா கொண்டு செல்வதற்கும் 100 கோடி ரூபாய் செலவு செய்தால், மலேசிய நிறுவனத்திற்கு விற்று விடலாம் எனவும் கூறினார்.

நடிகை ஜெயசித்ரா மகன் கைது!
நடிகை ஜெயசித்ரா மகன் கைது!

அதற்காக, என்னை நம்ப வைக்க இங்கிலாந்து எட்ஜ் லேபரட்டரி விஞ்ஞானி என ஒருவரை அழைத்து வந்து கண் முன்னே சோதனை செய்தும், பெரம்பலூரில் இருந்து அம்ரிஷ் கூறிய முக்கிய நபர்களும் இரண்டு பேருந்துகளில் என்னை வந்து சந்தித்தும் சென்றனர். மேலும் என்னை நம்ப வைக்க சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, மிகப்பெரிய கண்டெய்னரில் வைத்து எனக்கு காட்டினர். அதன்பின்பு தான் நான் நம்பினேன்.

பிறகு, 100 கோடி ரூபாய் இல்லை என்றவுடன், பேரம் பேசி தன்னிடமிருந்து 26.20 கோடி ரூபாய் பணத்தை அம்ரிஷ் பெற்றுச் சென்றார். பின்னர், பெரம்பலூரில் இருந்து தனது சொகுசு காரில் இரிடியத்தை எடுத்து வந்து அம்ரீஷ் என் வீட்டில் கொடுத்தார். பின்னர் பார்சலில் மலேசியாவிற்கு அனுப்பி நீண்ட நாள் ஆகியும், மலேசிய நிறுவனத்திடம் இருந்து பணம் வராததால் அதிர்ச்சி அடைந்து அம்ரீஷிடம் கேட்ட போது, என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன், தன்னை மலேசிய நிறுவனம் ஏமாற்றி விட்டதாக கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

சிவனும் பார்வதியும் ஆடும் போது உருவான இரிடியம் எனக்கூறி மோசடி!

கடவுள் நம்பிக்கை தனக்கு அதிகம் என்பதால், சிவனும் பார்வதியும் நடனமாடும் போது வரக்கூடிய இடி, மின்னலின் போது உருவான இரிடியம் எனக்கூறி ஏமாற்றிவிட்டதாக நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தனக்கு நேர்ந்ததை வைத்து தான் சதுரங்க வேட்டை படத்தில் வரும் காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவினர், அம்ரீஷிடம் விசாரித்த போது, நெடுமாறனிடம் மோசடி செய்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து, அம்ரீஷை கைது செய்த காவல்துறையினர், தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகின்றனர். இவ்விவகாரத்தில் சினிமா பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதால், அம்ரீஷை காவலில் எடுத்து விசாரிக்கவும், அவரிடம் விசாரிக்கும்போது இம்மோசடியில் தொடர்புடைய சர்வதேச கும்பலும் சிக்கும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா மகன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.