உத்தரப் பிரதேசம்: ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள பதிவு அறை ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) இந்திர விக்ரம் சிங், எஸ்பி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை ஆய்வு செய்தனர். மேலும், மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தடயவியல் குழுவினர் ஆதாரங்களை சேகரித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் விசாரணைக் குழு கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், "சம்பவம் நடந்த இடம் நீதிமன்ற அறை அல்ல, மாறாக அது கொல்லப்பட்ட வழக்கறிஞரின் அலுவலகம். அவர் சில வேலைகளுக்காக அங்குச் சென்றார். அவருடைய சக ஊழியர் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், அதன் பிறகு வழக்கறிஞரின் உடலைக் கண்டுபிடித்ததாகவும் கூறினர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்” என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: யார் பெரிய தாதா என்ற மோதல்... ஒருவருக்கு கத்திக்குத்து, இருவர் கைது!