தமிழ்நாட்டில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நாளை (மே.10) முதல் அமலுக்கு வரவுள்ளதால், அதையொட்டி மதுபான கடைகள் இன்று இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான பிரியர்கள் மதுக்கடைகளை தேனீக்கள் போன்று மொய்க்கின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் நகர் பகுதியில் அதிக விலையில் மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பதற்கு, 720 மதுபாட்டில்களை வாங்கி சென்ற தண்ணீர் குளம் பகுதியை சேர்ந்த விமல்குமார் என்பவரை திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர் அவரது வாகனத்தில் இருந்த 720 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.