சென்னை திருநீர்மலை இணைப்புச் சாலையில் இன்று (ஜூன்.3) காலை சங்கர் நகர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த சரக்கு வாகனத்தை (டெம்போ) தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். வாகனத்தில் காய்கறி மூட்டைகளுடன் மறைத்து வைத்து, அரசால் தடைசெய்யபட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் கொண்டு வந்தது தெரியவந்து.
இதேபோல், மற்றறொரு உயர் ரக காரை சோதனை செய்ததில், அதிலும் சில குட்கா மூட்டைகள், 100 மதுபான பாட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவத்தில், தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ரங்கன் (21), அனகாபுதூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (34), ராஜேஷ் (34), சண்முக பிரசாத் (35), முருகேஷ் (33) ,அருட்செல்வம் (36), ஓசூரை சேர்ந்த பாபு ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். விசாரணையில், ஓசூரிலிருந்து வண்டலூரில் உள்ள குடோனிற்கு குட்கா பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து ஏழு பேரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்எல்ஏ பூண்டி கலைவாணன்