ETV Bharat / crime

சென்னையில் கட்சி தலைவரை கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் கைது - Chennai District News

சென்னை கோயம்பேடு அருகே அகில இந்திய மக்கள் ஜனநாயக கட்சி தலைவரை காரில் கடத்தி சென்று தாக்கிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் கட்சி தலைவரை கடத்திய 5 பேர் கும்பல் கைது

author img

By

Published : Jun 11, 2022, 7:27 PM IST

சென்னை: புளியந்தோப்பு டிமலஸ் சாலை கே.பி.பார்க் பகுதியில் வசிப்பவர் சாலமன் (42). அகில இந்திய ஜனநாயக கட்சி தலைவரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்றிரவு (ஜூன் 10) தனது நண்பர் விஜயகுமாருடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் ஓட்டல் உணவு அருந்தி விட்டு வெளியே வந்தனர்.

அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், சாலமனை அடித்து உதைத்து காரில் கடத்தி சென்றது. இதனால், அதிர்ச்சியடைந்த விஜயகுமார் உடனே காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கோயம்பேடு போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

கடத்தப்பட்ட சாலமனின் செல்போன் எண்ணை வைத்து, அவரது இருக்கும் லோக்‌கேஷனை ஆய்வு செய்தபோது மதுரவாயல் அபிராமி நகரில் போன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அங்கு சென்ற போலீசார் படுகாயத்துடன் கிடந்த சாலமனை மீட்டு, கடத்திய 5 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அண்ணாநகரை சேர்ந்த கண்ணன்(40) என்பவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலமனுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் ரியல் எஸ்டேட் வியாபாரம் சம்மந்தமாக அவரிடம் 55 லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட சாலமன் தலைமறைவானதால் அவரை நீண்ட நாட்களாக தேடிவந்துள்ளார்.

கும்பலால் கடத்தப்பட்ட சாலமன்
கும்பலால் கடத்தப்பட்ட சாலமன்

இதில், நேற்று எதேச்சையாக கோயம்பேட்டில் உள்ள ஓட்டலில், கண்ணன் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்ற போது அங்கு எதிர்பாராத விதமாக சாலமனை பார்த்துள்ளார். அதனால் அவரை காரில் கடத்தி சென்று குடோனில் வைத்து பணத்தை திருப்பி கேட்டு தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்ணன் மற்றும் அவரது நண்பர்களான விழுப்புரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சுரேஷ்(52), மதுரவாயலை சேர்ந்த சரவணன்(32), பாலமுருகன்(24), ஆலப்பாக்கம் நாராயண மூர்த்தி (36) ஆகிய 5 பேரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும் காயமடைந்த சாலமனை கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதையும் படிங்க: சென்னை தொழிலதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.