கேரளா: இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடம் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. இதில், கஞ்சா மற்றும் எம்.டி.எம்.ஏ என்ற போதை பொருள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இடுக்கியில் உள்ள தொடுபுழாவில் கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், இது தொடர்பான நபர்கள் லாட்ஜில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் லாட்ஜில் சோதனை செய்தபோது தொடுபுழா, பெரும்பள்ளிச்சிறையைச் சேர்ந்த யூனுஸ், கொடமங்கலம் நெல்லிக்குழியைச் சேர்ந்த 22 வயதான பெண் ஆகியோர் தங்கியிருந்த அறையில் 6.6 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் கிடைத்துள்ளது. மேலும், போதைப்பொருளை சூடாக்கும் குழாய், மருந்தை விநியோகிப்பதற்கான சிறிய பொட்டலங்களும் இருந்ததை தொடர்ந்து இளம்பெண் மற்றும் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 6.6 கிராம் எம்.டி.எம்.ஏ. பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இளம்பெண் அலறி அடித்துக்கொண்டு போலீஸ் ஜீப்பில் ஏறினார். காவல்நிலையம் வந்தவுடன் இளம்பெண் நிற்காமல் அழுது பரபரப்பை ஏற்படுத்தினார். இவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்தவர்கள் மற்றும் தொடுபுழாவில் போதைப்பொருள் வாங்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோவையில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்... ஒருவர் கைது...