ETV Bharat / crime

ரயில் மூலம் மதுபானங்கள் கடத்தல் - 42 பேர் கைது

author img

By

Published : Jun 1, 2021, 9:02 AM IST

ரயில் மூலம் மதுபானம் கடத்தியவர்களிடமிருந்து 1,541 லிட்டர் மதுபாட்டில்களை ரயில்வே காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ரயில் மூலம் மதுபானங்கள் கடத்தல்
ரயில் மூலம் மதுபானங்கள் கடத்தல்

சென்னை: சட்டவிரோதமாக ரயிலில் மதுபானம் கடத்தியதாக கடந்த சில நாட்களில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மேலும் போக்குவரத்து வசதியும் தடை செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும் பல மாவட்டங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பவர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடி இருக்கும் போது மதுபானம் கொண்டு வருவது எப்படி என காவல் துறையினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது சாலை மார்க்கம், போக்குவரத்து வசதி தடை செய்துள்ள நிலையில் மதுபானத்தை அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களிலிருந்து வாங்கி ரயில் வழியாக தமிழ்நாட்டிற்குள் கடத்தி வருவது தெரியவந்தது.

இதனையடுத்து ரயில்வே இருப்புப்பாதை காவலர்கள், தனிப்படை அமைத்து ரயில்களில் சோதனையைத் தீவிரப்படுத்தினர். அப்போது கடந்த 24ஆம் தேதி முதல் நேற்று முன்தினம்(மே.30) வரை சட்டவிரோதமாக ரயிலில் மதுபானத்தை கொண்டு சென்றதாக 42 பேர் கைது செய்து, அவர்களிடமிருந்து 1541.25 லிட்டர் மதுபானத்தை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யபட்ட மதுபானங்கள் அந்தந்த மாவட்ட மதுபானத் தடுப்புப் பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரயில் நிலையங்களில் நடைபெறும் அனைத்து விதமான குற்ற நடவடிக்கை தொடர்பாக, தகவலைத் தெரிவிக்க இருப்புப்பாதை காவல் 24*7 உதவி மைய எண் 1512, தொலைத்தொடர்பு எண் 99625 00500 அனைத்துப் பயணிகளுக்கும் தெரியும்வண்ணம் அனைத்து இரயில் நிலையங்களிலும், ரயில் வண்டிகளிலும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், காணாமல் போன குழந்தைகள், அனாதை குழந்தைகள், தனியாக தவிக்கும் குழந்தைகள் பற்றிய தகவல்களை 'காவலன்’ செயலி மூலம் ரயில்வே காவல் நிலையத்திற்குத் தகவல் தரலாம் என ரயில்வே காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உயர் ரக மதுபானங்களை கொள்ளையடிக்க முயற்சி - கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.