சென்னை: அரும்பாக்கத்தில் பர்தா அணிந்து வந்து மென் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரும்பாக்கம் அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் சுரேஷ் பாபு (35), நேற்று (பிப். 4) மாலை 5.30 மணிக்கு தனது வீட்டை பூட்டி விட்டு புரசைவாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளார். இதன் பின்னர் இரவு 10.30 மணிக்கு அவர் திரும்பிய போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்றபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு 40 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக அரும்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் பர்தா அணிந்து வந்து நபர் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்டது ஆணா அல்லது பெண்ணா என இரு கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 150 சவரன் நகை, ரூ.6 லட்சம் கொள்ளை!