மதுரையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் மதுரையில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் ஆட்டோவில் சுற்றித் திரிந்தவர்களை மடக்கிப் பிடித்த தனிப்படை காவல்துறையினர் அவர்களை சோதனை செய்ததில் 240 கிலோ கஞ்சா மற்றும் துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவை வைத்திருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் பிரபல ரவுடி வெள்ளை காளியின் கூட்டாளிகளான மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்பது தெரியவந்தது. மேலும் உடனிருந்த மாரிமுத்து மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இவ்விருவரையும் கைது செய்து காவல்துரையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.