சென்னை கொளத்தூர் காமராஜ் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரவீன் (16), கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
கரோனா ஊரடங்கு விடுமுறைக்கு பிறகு கடந்த எட்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. பிரவீன் கடந்த 4 நாள்களாக பள்ளிகளுக்கு சென்று வந்துள்ளார்.
இதையடுத்து இன்று (பிப். 11) காலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில், பிரவீன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெளியே சென்றிருந்து பெற்றோர் வீட்டினுள் வந்து பாத்தபோது பிரவீன் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதைத்தொடர்ந்து உடனே அவரை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் ஏற்கெனவே பிரவீன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் பெற்றோர் அளித்த தகவலின் பேரில் கொளத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பிரவீன் உடலை உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரவீனின் வீட்டில் காவல் துறையினர் சேதானை செய்ததில், அங்கு அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், பிரவீன் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக அயராமல் படித்ததாகவும், ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் போனதகாவும், காலாண்டு, அரையாண்டு, தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், தான் குறைவான மதிப்பெண் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது கரோனா காரணமாக 11ஆம் வகுப்பும் ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பு தனக்கு புரியவில்லை எனவும், கரோனா முடிந்து பள்ளிக்கு சென்றால் ஆசிரியர்கள் நம்பிக்கை கொடுப்பார்கள் என பார்த்தால் ஆன்லைன் வகுப்பில் படித்தால் மட்டுமே தேர்ச்சி அடைய முடியும் என கூறியதால் மனமுடைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு வருடமாக படிக்க வேண்டியதை மூன்று மாதத்தில் எப்படி படிக்க முடியும் எனவும், குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் பி.காம் படிக்க வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாது என தற்கொலை முடிவு எடுத்து கொண்டதாக அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையில், இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் உலா வரும் போலி கணக்கு: ரோஜா சீரியல் நடிகை புகார்