சென்னை ஆவடியை சேர்ந்தவர் மெக்கானிக் ராஜேந்திரன். இவருக்கும் இவரது மனைவி அஸ்வினிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அஸ்வினி, செம்பியம் காவல்நிலையத்தில் கணவர் ராஜேந்திரன் மீது புகார் அளித்துள்ளார்.
இதனால் ராஜேந்திரன் மனமுடைந்து காணப்பட்டார், இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து திருத்தனி செல்லும் மின்சார ரயிலில் படியின் அருகே அவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் வந்த மூன்று நபர்கள், நீங்கள் அஸ்வினியின் கணவரா என கேட்டுவிட்டு அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அஸ்வினியும் கூலிப்படையினரும் சேர்ந்து தன்னை கொலை செய்ய முயன்றதாக ராஜேந்திரன் கூறியுள்ளார். தற்போது சென்னையை சேர்ந்த கூலிப்படையினர் அனுராஜ், கமலேஷ், தினேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:
#EXCLUSIVE ப.சிதம்பரத்துடன் பொருளாதாரம் குறித்த பிரத்யேக நேர்காணல்!