ETV Bharat / city

சீல் வைக்க வந்த வட்டாட்சியருடன் கிராம மக்கள் வாக்குவாதம்!

author img

By

Published : Nov 14, 2019, 8:12 PM IST

வேலூர்: வாணியம்பாடி அருகே  அரசுக்குச் சொந்தமான சமுதாய கூடத்தை 19 ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமித்து வந்ததாக எழுந்த புகாரை அடுத்து சீல் வைக்க வந்த வட்டாட்சியருக்கும் கிராம மக்களும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது.

வட்டாட்சியருடன் கிராம மக்கள் வாக்கு வாதம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் கொத்தகோட்டை ஊராட்சிக்குட்பட்ட செக்குமேடு பகுதியில் கோவிந்தசாமி என்பவருக்குச் சொந்தமான இடத்தில், கடந்த 2000ஆம் ஆண்டு அரசு சார்பில் சமுதாயக் கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதன்படி திருப்பத்தூர் முன்னால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் மற்றும் வாணியம்பாடி முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் லத்தீப், பொது நிதியிலிருந்து சேர்த்து ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்டி முடிக்கப்பட்டு, அப்போது இருந்த பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திறந்து வைத்த அன்று முதல் 19 ஆண்டு காலமாக தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து அதில் திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தி அதில் கிடைக்கும் வருமானத்தை அரசுக்கு செலுத்தாமல் அவர் ஒருவரே அனுபவித்து வருவதாக வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது.

புகாரின் பேரில் வாணியம்பாடி வட்டாட்சியர் முருகனுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அந்த சமூதாய கூடத்திற்கு சீல் வைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட பிறகு சமுதாய கூடத்திற்கு வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள், சீல் வைக்க வந்த போது வட்டாட்சியரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சீல் வைக்க வந்த வட்டாட்சியருக்கும் கிராம மக்களும் இடையே வாக்குவாதம்

பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அந்த சமூதாயக் கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு சிறிது நேரம் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க:

அனுமதி பெறாமல் கட்டிய திருமண மண்டபத்துக்கு சீல்!

Intro:வாணியம்பாடி அருகே  அரசுக்கு சொந்தமான சமுதாய கூடத்தை 19 ஆண்டுகளாக தனிநபர் ஆகிரமித்து வந்ததாக எழுந்த புகாரை அடுத்து சீல் வைக்க வந்த வட்டாட்சியர்க்கும் கிராம மக்களும் இடையே வாக்கு வாதத்தால்  பரபரப்பு ஏற்ப்பட்டது. 
Body:
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் கொத்தகோட்டை ஊராட்சிக்குட்பட்ட செக்குமேடு பகுதியில் கோவிந்தசாமி  என்பவர்க்கு  சொந்தமான இடத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு அரசு சார்பில் சமுதாய கூடம் கட்ட முடிவு செய்யப்பட்டு திருப்பத்தூர் முன்னால் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் மற்றும் வாணியம்பாடிமுன்னால் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் லத்தீப் மற்றும் பொது நிதியிலிருந்தும் சேர்த்து  ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயகூடம்  கட்டி டிக்கப்பட்டு அப்போது இருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்துள்ளார்.திறந்து வைத்த அன்று  முதல் 19 ஆண்டுகாலமாக தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து அதில் திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தபட்டு   அதில் கிடைக்கும் வருமானத்தை அரசுக்கு செலுத்தாமல் தனி நபர் ஒருவரே அனுபவித்து வருவதாக வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது.புகாரின் பேரில்  வாணியம்பாடி வட்டாட்சியர்  முருகனுக்கு மாவட்ட ஆட்சியர்  சண்முகசுந்தரம்  அந்த சமூதாய கூடத்திற்கு சீல் வைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.இதைதொடர்ந்து அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட பிறகு சமுதாய கூடத்திற்கு வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள்,வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தி மற்றும் போலீசார் ஆகியோர்  சீல் வைக்க வந்த போது வட்டாட்சியரிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அந்த சமூதாய கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

         Conclusion:பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தால் அங்கு  சிறிது நேரம் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.