வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பத்தா பேட்டை பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் நியாய விலைக்கடை அரிசியை ஒருவர் ஆந்திராவிற்கு கடத்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை சோதனையிட்டுக்கொண்டிருந்த வட்ட வழங்கல் அலுவலர் குமார் தலைமையிலான வருவாய் துறையினர் மடக்கி சோதனை செய்ய அருகில் சென்றபோது இருசக்கர வாகனத்தை விட்டு அந்த நபர் தப்பி ஓடினார்.
இதையடுத்து அவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவர் கடத்த முயன்ற சுமார் 200 கிலோ நியாய விலைக்கடை அரிசியை கைப்பற்றினர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட அந்த நபர் குறித்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: 16 டன் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது!