ETV Bharat / city

நிதி முறைகேடு காரணமாக வேலூர் செஞ்சிலுவை சங்கத்துக்கு சீல்!

author img

By

Published : Dec 18, 2020, 9:48 PM IST

நிதி முறைகேடு காரணமாக வேலூர் செஞ்சிலுவை சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

வேலூர் இந்திய செஞ்சிலுவை சங்கம்
வேலூர் இந்திய செஞ்சிலுவை சங்கம்

வேலூர்: வேலூர் மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் 2020ஆம் ஆண்டிற்கான தணிக்கை கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று (டிச.18) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சங்கத்தின் நிதிகளில் கண்டறியப்பட்ட முரண்பாடுகளால் மாவட்ட ஆட்சியருக்கு ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து நிர்வாக குழுவைக் கலைப்பதாக ஆட்சியர் அறிவித்தார்.

அடுத்த 15 நாட்களுக்குள் புதிய நிர்வாக குழுவைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், அது வரை சங்கம் மாவட்ட வருவாய் அலுவலர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்றும் அறிவித்தார்.

தொடர்ந்து பழைய நிர்வாகிகள் சங்கத்தின் உள்ளே செல்ல கூடாது என்பதற்காக வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் அலுவலகத்திற்கு வருவாய் அலுவலர் சீல் வைத்தார்.

இது குறித்து செஞ்சிலுவை சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திரநாத் கூறுகையில், "தணிக்கை கூட்டத்தின் போது நிர்வாகிகளிடம் ஆட்சியர் தனியே விசாரணை மேற்கொண்டார். அப்போது என் மீது சிலர் அதிருப்தி தெரிவித்தனர். அதன் அடிப்படையில் என்னிடமும் விசாரித்தனர். நிர்வாகத்தில் வேலை சரியாக நடைபெற வேண்டும் என்று நான் சில சமயங்களில் கண்டிப்புடன் நடப்பேன். அது பிடிக்காத சிலர் இது போன்று நடந்துள்ளனர்" என்றார்.

இதையும் படிங்க: 23 கிலோ எடைகொண்ட இரண்டு வெண்கல சிலைகள் கொள்ளை - காவல்துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.