வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி, அண்ணாசாலை, வள்ளலார் நகர் போன்ற பகுதிகளில் நேற்று இரவு சுமார் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. அதேபோல் காட்பாடி, பாகாயம், லத்தேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.
இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று பெய்த இந்த மழை விநாயகரின் ஆசிர்வாதம் போல் இருப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.