ETV Bharat / city

வேலூரில் சதமடிக்கும் வெயில்: மக்கள் கடும் அவதி!

author img

By

Published : Apr 27, 2019, 10:40 PM IST

வேலூர்: வெயிலின் தாக்கம் சதத்தை தாண்டி செல்வதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

வேலூரில் சதமடிக்கும் வெயில்: மக்கள் கடும் அவதி!

தமிழ்நாட்டில் கோடை வெயில் சில பகுதிகளில் சதத்தை தாண்டி வருகின்றது. இதில் பிற மாவட்டங்களை காட்டிலும் வேலூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இங்கு அதிகபட்சம் 110 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியுள்ளது. வெயில் சதத்தையும் தாண்டி அதிகமாக கொளுத்துவதால், மக்கள் வெளியே வரக்கூட அச்சமடைகின்றனர். அதிலும், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

வேலூரில் சதமடிக்கும் வெயில்: மக்கள் கடும் அவதி

இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் வசதி செய்து கொடுக்கப்படாததால் மக்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்து பஸ் ஏறும் அவலமும் நிகழ்கிறது. குறிப்பாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைபாஸ் சாலை ஓரம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் நின்றபடி பஸ் ஏறுகின்றனர்.

இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் மற்றும் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் மார்க்கெட் போன்ற பொது இடங்களில் தண்ணீர் மோர் பந்தல்கள் அமைத்து தர வேண்டும் எனவும் வேலூர் மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

வேலூரில் வெயிலை கண்டு ஓடி ஒளியும் மக்கள்

107 டிகிரிக்கு மேல் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் கடும் அவதி

தமிழகத்தில் கோடை காலங்களில் பிற மாவட்டங்களில் வேலூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படும் இங்கு அதிகபட்சம் 110 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் பதிவாகும். இதனால் வேலூரை வெயிலூர் என்றும் இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இந்த ஆண்டும் வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது குறிப்பாக  இங்கு கடந்த ஒருவாரமாக அதிகபட்சம் 107 டிகிரி வரை வெயில் அடிப்பதால் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர் காலை 9 மணிக்கெல்லாம் வெயில் தாக்கத்தால் அனல் காற்று வீச ஆரம்பிக்கிறது இதனால் வெளியே செல்லும் பெண்கள் கையில் பாதுகாப்புக்காக குடை எடுத்து செல்கின்றனர் நேரம் செல்ல செல்ல பகல் ஒரு மணி அளவில் சுட்டெரிக்கும் அளவுக்கு வெயில் தாக்கம் காணப்படுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர் வெயிலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆங்காங்கே குளிர்பான கடைகளில் குளிர்ந்த நீர் ஆகாரங்களை பருகி வருகின்றனர் இருப்பினும் உஷ்ணம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைவதைக் காணமுடிகிறது பகலில் ஒருபுறம் வெயில் சுட்டெரித்தாலும் கூட இரவிலும் அதன் தாக்கம் நீடிப்பதால் மக்கள் தூக்கம் இன்றி தவிக்கின்றனர் அதாவது இரவு நேரங்களில் வீடுகளில் அனல் காற்று வீசுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் சூட்டை தவிர்ப்பதற்காக குளிர்ச்சியான பாணங்கள் மற்றும் பழங்களை அதிகளவில் மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர் இதனால் வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே குளிர்பான கடைகள் பழ கடைகள் ஜூஸ் கடைகள் போடப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் வெயிலை கண்டு ஓடி ஒளிந்து மரங்களின் நிழல்களில் தஞ்சமடைகின்றனர் இன்னும் ஓரிரு நாளில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க உள்ளதால் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கும் எனவே கத்திரி வெயிலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் வேலூர் மாவட்ட மக்கள் திகைத்து வருகின்றனர் இதற்கிடையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் வசதி செய்து கொடுக்கப்படாததால் மக்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்து பஸ் ஏறும் அவலமும் நடக்கிறது குறிப்பாக சென்னை டூ பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைபாஸ் சாலை ஓரம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் நின்றபடி ஆபத்துடன் பஸ் ஏறுகின்றனர் வேலூர் மாவட்டத்தின் முக்கிய நகர் பகுதியான புதிய பேருந்து நிலையம் அருகில் கிரீன் சர்கிள் பஸ் நிறுத்தத்தில் கூட நிழற்குடை அமைத்து கொடுக்கப்படவில்லை எனவே அங்கும் பொதுமக்கள் வெயிலில் தவிப்பதை காணமுடிகிறது எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பேருந்து நிறுத்தங்களில்  நிழற்குடை அமைத்து தர வேண்டும் மற்றும் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் மார்க்கெட் போன்ற பொது இடங்களில் தண்ணீர் மோர் பந்தல்கள் அமைத்து தர வேண்டும் எனவும் வேலூர் மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.