வேலூர்: ஒடுக்கத்தூர் அடுத்த ராமநாயினிகுப்பம் கிராம ஊராட்சி செயலாளராக இருந்தவர் அதே பகுதியை ராஜசேகர்(39). இவர் நேற்று இரவு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அக்கடிதத்தில்," காந்திமதி (மனைவி) என்னை மன்னித்துவிடு, நான் உன்னை விட்டு போகிறேன். குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள், எனது இந்த முடிவுக்கு திமுக கவுன்சிலர் அரிதான் காரணம் வேறு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊராட்சிக்கு வரும் நிதியை தனக்கு வழங்க வேண்டும் என கவுன்சிலர் அரி தொடர்து வற்புறுத்தி வந்ததாகவும், ராஜசேகர் தம்பிக்கு ரேசன் கடையில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் பணம் பெற்ற கவுன்சிலர் அரி, அந்த வேலையை வாங்கி தராமல் அலைக்கழித்து மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இததொடர்பாக வேப்பங்குப்பபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவி தூக்கிட்டுத் தற்கொலை