'தாலிக்கு தங்கம்' வழங்கும் நிகழ்ச்சி நேற்று (பிப்.10) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வந்தது. இதை வாங்க ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலை முதலே காத்திருந்து 'தாலிக்கு தங்கத்தை' வாங்கிச்சென்றனர்.
அப்படி வந்த பெண்களில் பலர் கைக்குழந்தையுடன் வந்திருந்தனர். அப்போது தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட மிகவும் அவதிப்பட்டனர். இது குறித்து செய்தியாளர்கள் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளதா? இல்லாவிடில் இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் குழுமத்தில் உறுதியளித்தார். உறுதி அளித்ததோடு சமூக நலத்துறை அலுவலர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் உள்ள அறையை உடனே ஒதுக்கி உத்தரவிட்டு, பாலூட்டும் அறை அமைத்து கொடுத்துள்ளார். மேலும் இனிவரும் அனைத்து வேலை நாள்களிலும் இது தாய்மார்கள் பாலூட்டும் அறையாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவால் நாடு திரும்பிய தமிழர்களுக்கான சிறப்புத் திட்டம் அறிவிப்பு