ETV Bharat / city

மஞ்சுவிரட்டு: காளையர்களை விரட்டியடித்த காவலர்கள் - Veerangkuppam manju virattu

திருப்பத்தூர்: வீராங்குப்பம் மஞ்சுவிரட்டில் காளைகளை ஓடவிடாமல் குடிபோதையில் இடையூறு செய்த இளைஞர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

வீராங்குப்பம் மஞ்சு விரட்டு
வீராங்குப்பம் மஞ்சு விரட்டு
author img

By

Published : Jan 30, 2020, 7:20 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறும். இந்தாண்டு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 178ஆவது மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ஆந்திரா, கர்நாடகா எனப் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொள்ள வருகைதந்தன.

மருத்துவக் குழுவின் பரிசோதனைக்குப் பிறகு ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை குறைவான நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனடிப்படையில் குறைந்த நொடியில் ஓடிய ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த டான் என்ற காளை முதல் பரிசையும், வன்னிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த காளை இரண்டாவது பரிசையும் என மொத்தம் 25 காளைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

வீராங்குப்பம் மஞ்சுவிரட்டு

இந்த மஞ்சுவிரட்டைப் பார்க்க பல்வேறு பகுதிகளிலிருந்த வந்த ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் குடிபோதையில் சில இளைஞர்கள் காளைகள் ஓடுவதைத் தடுக்கும்வகையில் வீதியில் நின்று இடையூறு செய்தனர். இதனால் வீதியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு காளை கூட்டத்தில் புகுந்து அங்குள்ள தடுப்பு வேலியில் சிக்கி கீழே விழுந்தது.

இதையடுத்து காவல் துறையினர் வீதியில் இடையூறு ஏற்படுத்திய இளைஞர்கள் மீது சிறு தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் சில மணித்துளிகள் நிறுத்திவைக்கப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியானது இளைஞர்களை அப்புறப்படுத்திய பிறகு மீண்டும் நடைபெற்று முடிந்தது.

இதையும் படிங்க:

ஈழம் காக்க ஈகம் செய்த முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று !

Intro:Body:ஆம்பூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா

குடிபோதையில் காளைகள் ஓடாமல் இடையூறு செய்த இளைஞர்களை போலீசார் விரட்டி அப்புறப்படுத்தினர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியில் 178-ஆம்ஆண்டு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது இதில் ஆந்திரா கர்நாடகா மற்றும் தமிழகத்தை சேர்ந்த வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300 க்கும் மேற்பட்ட காளைகள் மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்டன இதில் காலை முதலே ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததால் குடிபோதையில் சில இளைஞர்கள் காளைகள் ஓடுவதை தடுக்கும் வகையில் வீதியில் நின்று இடையூறு செய்து வந்தனர் இதனால் காளைகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வீதியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு காளை கூட்டத்தில் திணறி அங்குள்ள தடுப்பு வேலியில் சிக்கி கீழே விழுந்து சிரமத்துக்கு உள்ளானது இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர் மற்றும் காவல்துறையினர் வீதியில் இடையூறு ஏற்படுத்தும் இளைஞர்களை சிறு தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர் இதனால் சில மணித்துளிகள் நிறுத்தி வைக்கப்பட்ட எருதுவிடும் திருவிழா தொடர்ந்து இளைஞர்களை அப்புறப்படுத்திய பின்னர் எருது விடும் விழா நடைபெற்று முடிந்தது இதில் குறைந்த நொடியில் ஓடிய ஆலங்காயம் பகுதியை சேர்ந்த டான் என்ற காளை முதல் பரிசையும்,வன்னிநாதபுரம் பகுதியை சேர்ந்த காளை இரண்டாவது பரிசையும் என மொத்தம் 25 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.