வேலூர்: வேலூர் புதிய மீன் மார்கெட் எதிரே உள்ள வேலூர் கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மிதப்பதாக வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர். சடலத்தை மீட்டு வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “இன்று (ஜூன் 26) காலை 10 மணி அளவில் கோட்டை அகழியில் சடலம் மிதப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. நேரில் சென்று விசாரணை செய்ததில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.
வேலூர் கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு: காவல்துறை விசாரணை! - Vellore district news
வேலூர் கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.