வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் நகராட்சி குடிநீர் இணைப்புத்தொட்டி உள்ளது. இந்தத் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட பின்பு தான், காந்தி நகர் மக்களுக்கு குடிநீர் கிடைக்கும். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக இந்த குடிநீர் தொட்டியில் மழைநீர் தேங்கியிருந்தது.
இதனிடையே வழக்கம் போல் காந்தி நகருக்கு குடிநீர் திறப்பதற்கு வந்த நகராட்சி ஊழியர்கள், குடிநீர்த் தொட்டியில் இரண்டு விஷப்பாம்புகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அங்கு கூடிய காந்தி நகர் மக்கள் தொட்டியில் இருந்த, ஆறு அடி நீளம் கொண்ட இரண்டு விஷப்பாம்புகளையும் வெளியேற்றினர்.
குடிநீர் இணைப்புத்தொட்டியில் விஷப்பாம்புகள் இருந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : ‘திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் அதிகாரத்தை பறிப்பதே நாம் தமிழரின் லட்சியம்’ - சீமான்