வேலூர்: குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லட்சுமி. பள்ளிகொண்டா பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஹவாலா பணம் 14 கோடி பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, லட்சுமி கூடுதல் பணிக்காக பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்க்கு வந்திருந்தார். அப்போது, பள்ளிகொண்டா சர்வீஸ் சாலையில் நாய்க்குட்டி ஒன்று வாகனத்தில் சிக்கி சாலையிலேயே உயிரிழந்து இருந்தது.
அந்த நாயின் உடல் மீது தொடர்ச்சியாக வாகனங்கள் ஏறி சென்றன. இதனை யாரும் கண்டுகொள்ளாததை பார்த்த ஆய்வாளர் லட்சுமி, சற்றும் யோசிக்காமல் விரைந்து சென்று சாலையில் உயிரிழந்து கிடந்த நாய்க்குட்டியின் உடலை வெறும் கைகளால் தூக்கிச் சென்று காவல் நிலையத்திற்கு அருகில் அடக்கம் செய்தார். பெண் காவல் ஆய்வாளரின் இத்தகைய செயல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சக காவலர்கள் உட்பட பொதுமக்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: தமிழ்நாடு காவல்துறை உத்தரவை ரத்து செய்யக்கோரி விசிக வழக்கு