கரோனா தொற்றின் இரண்டாவது அலையினால் கரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கான படுக்கையின் தேவையும் அதிகமாக உள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு வேலூர் மாநகரத் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முதற்கட்டமாக சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில், கரோனா நோயாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய படுக்கைகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பார்த்திபன் முன்னிலையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கியுள்ளனர்.