ETV Bharat / state

"அரசியல் கட்சியினருக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை" - உயர் நீதிமன்றம் அதிருப்தி! - MADRAS HIGH COURT

அரசியல் கட்சியினருக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை; அவர்களுக்கு அவர்களது சொந்தக் கட்சியை பற்றி மட்டும் தான் அக்கறை இருக்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Madras High Court
சென்னை உயர்நீதிமன்றம் -கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2024, 4:53 PM IST

சென்னை: கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக பன்னீர்செல்வம் தரப்பினருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.பி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக 114 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்களின் நகல்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும், 300க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஏற்கனவே 100 பேருக்கும் மேல் முன் ஜாமீன் பெற்றுள்ளதாகவும், குறிப்பிட்ட அரசு தரப்பு வழக்கறிஞரின் புலன் விசாரணை முன்னேற்ற கதியில் நடந்து வருகிறது. விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலுக்குள் புதிய வாக்காளர் பட்டியல்? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

இதனை அடுத்து தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி, "கல்லூரி மாணவிகளை மனசாட்சி இல்லாமல் எரித்த கட்சியினர் தற்போது தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகி அவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்தது இங்குதான் நடக்கிறது" எனக் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சியினருக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை உங்கள் சொந்தக் கட்சியை பற்றி மட்டும் தான் அக்கறை இருக்கிறது. உங்கள் வழக்குகளை மட்டும் விசாரித்தால் போதுமா? வேறு வழக்குகள் இல்லையா? என நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மேலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே காவல்துறையினர் தான் பணியில் இருக்கிறார்கள். தேவையில்லாமல் காவல்துறையினரை குற்றம் சாட்டுவதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கை பொறுத்தவரை சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதால், சிபிசிஐடி போலீசார் விரைந்து விசாரணையை முடித்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.