ETV Bharat / city

ஆன்லைன் தேர்வில் கேள்வித்தாள் குளறுபடி - மாணவர்கள் புகார்

வேலூர்: ஆன்லைன் வழியாக நடைபெற்ற இயற்பிய வேதியியல் தேர்வில் மாற்று பாடத்தின் வினாக்கள் மாறி வந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

author img

By

Published : Sep 19, 2020, 3:45 AM IST

Students complain that the questions in the online exam have changed

கரோனா தொற்று காரணமாக கல்லூரி இறுதி ஆண்டுத் தேர்வுகள் இணைய வழி மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 124 உறுப்பு கல்லூரிகளுக்கு கடந்த 16ஆம் தேதி இணைய வழித் தேர்வு தொடங்கியது.

இந்நிலையில், நேற்று (செப்.18) நடைபெற்ற இயற்பிய வேதியியல் தேர்வில் இரண்டு மதிப்பெண் பிரிவில் 8,9ஆவது கேள்விகளும் ஐந்து மதிப்பெண் பிரிவில் 14, 15ஆவது கேள்விகளும், பத்து மதிப்பெண் பிரிவில் 19, 20ஆவது கேள்விகள் என பெரும்பாலான கேள்விகள், வெளிப்பாடமான பகுப்பாய்வு வேதியியலில் இருந்தும், ஐந்தாவது பருவப் பாடத்தில் இருந்தும் கேட்கப்பட்டதாக மாணவர்கள் மத்தியில் புகார் எழுந்தது.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், " ஆன்லைன் தேர்வு என்பதால் வினாவில் ஏற்பட்ட குழறுபடி குறித்து நேரடியாக பேராசிரியர்களிடம் கூற முடியாமல் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கிறோம்.

இதுகுறித்து பல்கலைகழக நிர்வாகம் மாணவர்கள் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக திருவள்ளுவர் அரசு பல்கலைகழகத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் விஜயராகவனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, " வெளிபாடத்தில் இருந்து எந்த கேள்விகளும் கேட்கப்படவில்லை.

100% தேர்விற்கான உரிய பாடமான இயற்பிய வேதியியல் பாடத்தில் இருந்தே அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஒருசில கேள்விகள் வெளிப்பாடத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தால் அதை பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை வாரியத்துக்கு (Chemistry Board) பரிந்துறைக்கப்படும்.

அவர்கள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். மாணவர்கள் வெளிப்பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா வரிசை எண்ணை விடைத்தாளில் குறிப்பிட்டிருந்தால் உரிய மதிப்பெண் வழங்கப்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.