வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்ற வாணியம்பாடி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் செங்குட்டுவன், உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவினர், அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தரைக்காடு என்ற இடத்தில் சாராயம் காய்ச்சப்பட்டு வருவதை அறிந்த காவல் துறையினர், அங்கு செல்லும் முன்பே சாரயம் காய்ச்சுபவர்கள் தப்பியோடினர். பின்னர் காவல் துறையினர் அங்கு வைத்திருந்த 1600 லிட்டர் சாராய ஊறல்கள், காய்ச்சி தயார்நிலையில் வைத்திருந்த சாராயம் ஆகியவற்றை அங்கேயே ஊற்றி அழித்துவிட்டனர். மேலும் தப்பியோடிய கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படியுங்க: