ETV Bharat / city

ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் இல்லை - சீமான் - சீமான்

ஒரு மாநிலத்துக்குள்ளேயே ஒரே நேரத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதவர்கள், எப்படி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்
செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்
author img

By

Published : Sep 29, 2021, 10:15 AM IST

வேலூர்: அணைகட்டிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், கணியம்பாடி ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம், கலந்தாய்வு கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு என்ன செய்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அண்ணாமலை கூறியிருந்தது குறித்த கேள்விக்கு, “விவசாயிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளில் ஒன்றிய அரசு என்ன செய்துள்ளது என முதலில் ஒன்றிய அரசு வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும், பிறகு தமிழ்நாட்டை கேட்கட்டும்” என்றார்.

திமுகவுடன் மோதல்

நாம் தமிழரை மிரட்டுவதாக கூறுவதன் காரணம் என்ன என கேட்டதற்கு, “இன்றைக்குத் தேர்தல் களத்தில் நேரடியாக திமுகவுக்கும் நாம் தமிழருக்கும் தான் மோதல் என்பதால் கொலை மிரட்டல், பேரம் பேசி வருகிறார்கள். இதை நாங்கள் முறியடிப்போம்” என்றார்.

செய்தியாளர்கள் குறித்து ஹெச்.ராஜா அவதுராக பேசியது குறித்த கேள்விக்கு பதில் கூறிய சீமான், “பைத்தியக்காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை பற்றி வருத்தம் வேணுணா படலாம்” என தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்

மேட் இன் இந்தியா

தொடர்ந்து, “திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நீட் விலக்கு, 7 பேர் நிலைப்பாட்டில் எதிர்கட்சியாக இருக்கும் போது திமுக என்ன சொன்னது, ஆனால் அதில் தற்போது திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.

எங்களை மிரட்டுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. புகார் மீது நடவடிக்கை இல்லை. தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை. இந்தியா வாடகை தாய் பொருளாதாரத்தை தான் கொண்டுள்ளது.

இந்தியா மேக் இன் தானே தவிர, மேட் இன் இந்தியா என்பது இல்லை. மேட் இன் தமிழ்நாடு என முதலமைச்சர் சொல்கிறார். எதை மேட் பண்ணுவார்கள் இவர்கள், தமிழ்நாட்டில் சரக்கு மட்டும் தான் மேட் செய்யப்படுகிறது. கடந்த அதிமுக அரசுக்கும் திமுக அரசுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. அங்கேயும் ஊழல், இங்கேயும் ஊழல்” என்றார்.

ஒரே தேர்தல் அவசியம் இல்லை

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கேட்டதற்கு, ஒரு மாநிலத்துக்குள்ளேயே ஒரே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதவர்கள் எப்படி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவார்கள். இங்க ஒருத்தர் சட்டையே ஒருவருக்கு சரியாக இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியம் இல்லை, அதற்கு சாத்தியமும் இல்லை” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.