வேலூர்: பேர்ணாம்பட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து இருந்தது. அது நில உரிமையாளர் வைத்த மின்வேலியால் தான் உயிரிழந்தாக கூறி வனத்துறை பொய் வழக்கில் விவசாயியை கைது செய்ததாகவும்; இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய தீர்வு காண வேண்டுமெனவும் வனத்துறையைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 'வனவிலங்குகளை விவசாய விளைநிலங்களிலிருந்து எத்தகைய நெறிமுறையைப் பின்பற்றி விரட்டுவதென்று வனத்துறையினர் தெளிவுபடுத்தவேண்டும், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு ஒரு வாரத்திற்குள் இழப்பீடு வழங்குவதோடு, இழப்பீட்டை வழங்கவேண்டும்;
வனவிலங்குகள் விளைநிலங்களில் புகாத வண்ணம் வனஎல்லை முழுவதும் சூரிய மின் வேலி அமைப்பதோடு அகழிகளையும் உடனடியாக அமைக்க வேண்டும், வனவிலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு ரூ.5.00,000/-மும், உயிர்சேதத்திற்கு ரூ.20,00,000/-மும் வழங்குவதோடு குடும்ப வாரிசுக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும்,
விவசாயிகளுக்கு வனத்துறையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வுக்கான மாவட்ட வன அலுவலர் தலைமையில் மாதாந்திர விவசாய குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும்' போன்ற 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதையும் படிங்க: Nobel prize 2022 : மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோவுக்கு அறிவிப்பு!