மனிதனின் அன்றாட இயந்திர வாழ்க்கையில் விளையாட்டு என்பது மிகவும் அவசியம் ஆகும். பாரதியார் பாடிய 'ஓடி விளையாடு பாப்பா' என்ற பாடல் இதற்கு சிறந்த ஒரு உதாரணம். இப்படிப்பட்ட விளையாட்டு மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பொருந்தும்.
அந்த வகையில் வேலூரில் புறாக்களுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 70 புறாக்கள் கலந்துகொண்டன. அதிக உயரத்தில் தொடர்ந்து இடைவிடாமல் பறக்கும் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் திருப்பத்தூரை சேர்ந்த சையத் ஜாபீர் என்பவரின் புறா தொடர்ந்து ஏழு மணி பதினெழு நிமிடங்கள் பறந்து முதல் பரிசை தட்டிச் சென்றது.
இதையடுத்து முதல் பரிசாக அந்த புறாவுக்கு ரூ. 5 ஆயிரம் ரொக்கமும் கோப்பையும் வழங்கப்பட்டது. புறா சார்பில் அதன் உரிமையாளர் ஜாபீர் பரிசுகளைப் பெற்றுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து வாணியம்பாடி இத்தியாஸ் என்பவரின் புறா ஐந்து மணி நேரம் 32 நிமிடங்கள் தொடர்ந்து பறந்து இரண்டாவது பரிசாக ரூ. 3 ஆயிரத்தையும் கோப்பையையும் வென்றது. இதைடுத்து ஆம்பூரைச் சேர்ந்த நியாஸ் என்பவரின் புறா, 4 மணிநேரம் 37 நிமிடங்கள் பறந்து மூன்றாவது பரிசை வென்றது.
இதையும் படிங்க: ‘ஐஐடி மாணவி தற்கொலை: தமிழ்நாடு அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்’ - சு.வெங்கடேசன்