வேலூர்: காட்பாடியைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெங்களூருவைச் திம்மராயப்பா என்பவர் ஏடிஎம்களைப் பழுதாக்கி அதிலிருந்து பணத்தைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
இதனையடுத்து திம்மராயப்பாவைப் பிடிக்க சிசிடிவி பதிவுகளைக் கொண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு திம்மராயப்பா இருக்கும் இடம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில் விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் தலைமையிலான காவலர்கள் காட்பாடி ஓட்டைப் பிள்ளையார் கோயில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த திம்மராயப்பாவை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது தப்பிச் செல்ல முயற்சித்த அவரை, துரிதமாகச் செயல்பட்டு கைதுசெய்தனர். அவரிடமிருந்து 56 ஏடிஎம் கார்டுகள், ரூ.300, ஒரு இருசக்கர வாகனம், ஒரு செல்போன் பறிமுதல்செய்தனர். திம்மராயப்பாவிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: ஆவின் பால் வேனை திருடிச் சென்ற நபர் - மடக்கிப் பிடித்த போலீசார்!