ETV Bharat / city

நீட் ஆள்மாறாட்டம்: 100க்கும் மேற்பட்டோர் சிக்குகிறார்கள்?

author img

By

Published : Oct 2, 2019, 10:10 AM IST

வேலூர்: நீட் ஆள்மாறாட்டம் விவகாரம் தொடர்பாக திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு மருந்தாளுநரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

neet scam

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரம் தொடர்பான விசாரணை சூடுபிடிக்க, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகிறது. தேனி மருத்துவக் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக மருத்துவப் படிப்பில் சேர்ந்த உதித் சூர்யாவும் அவரது தந்தையும் கைது செய்யப்பட்டது முதல் தற்போதுவரை இந்த விவகாரத்தில் சர்ச்சை நீடித்துவருகிறது.

அடுத்தடுத்து வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் இர்ஃபான் என்பவரும் ஆள்மாறாட்டம் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேனி சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஆள்மாறாட்ட வழக்கில் சிக்கிய உதித் சூர்யாவுக்கு பிணை!

இதற்கிடையில் மாணவன் இர்ஃபானின் தந்தை முகமது சபியை கடந்த ஞாயிறன்று வேலூர் மாவட்டத்தில் வைத்து சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இவ்விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் இடைத்தரகர் வேதாச்சலம் என்பவர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் மூலமாகவே இதுபோன்று மாணவர்கள் ஏராளமானோர் மோசடியாக ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

நீட் ஆள்மாறாட்டம் - தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை!

முகமது சபியிடம் நடத்திய விசாரணையின்போது, அவர் திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு மருந்தாளுநர் கோவிந்தராஜ் தான் உதவியதாகக் கூறியுள்ளார். இதையடுத்து நேற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் மருந்தாளுநர் கோவிந்தராஜை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவரை தேனி மாவட்ட சிபிசிஐடி காவல் துறையிடம் ஒப்படைத்தனர். தற்போது கோவிந்தராஜிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதற்கிடையில் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் வேதாச்சலம் மூலம் தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

நீட் ஆள்மாறட்ட வழக்கில் இடைத்தரகர் கைது - சிபிசிஜடி தீவிர விசாரணை

பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவப் படிப்புகளில், இதுபோன்று முறைகேடு சம்பவங்கள் அரங்கேறி இருப்பது, சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:வேலூர் மாவட்டம்

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரம் - திருப்பத்தூரை சேர்ந்த அரசு மருந்தாளுநரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை - முக்கிய குற்றவாளியான இடைத்தரகருக்கு போலீஸ் வலைவீச்சு - ஆள்மாறாட்டம் மூலம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மோசடியாக நீட் தேர்வு எழுதினார்களா? அதிர்ச்சித் தகவல்கள்Body:
தமிழகத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தோண்ட தோண்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது தேனி மருத்துவக் கல்லூரியில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக மருத்துவ படிப்பில் சேர்ந்த உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் முதல் தற்போது வரை இந்த விவகாரத்தில் சர்ச்சை நீடித்து வருகிறது அடுத்தடுத்து வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் இர்பான் என்பவரும் ஆள்மாறாட்டம் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த்து கண்டுபிடிக்கப்பட்டது இதுதொடர்பாக தேனி சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதற்கிடையில் மாணவன் இர்பானின் தந்தை முகமது சபியை கடந்த ஞாயிறு அன்று வேலூர் மாவட்டத்தில் வைத்து சிபிசிஐடி காவல்துறையினர் பிடித்தனர் அவரிடம் விசாரித்ததில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன அதாவது இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் வேதாச்சலம் என்பவர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரது மூலமாகவே இதுபோன்று மாணவர்கள் ஏராளமானோர் மோசடியாக ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது முகமது சபியிடம் நடத்திய விசாரணையின்போது அவர் திருப்பத்தூரை சேர்ந்த அரசு மருந்தாளுநர் கோவிந்தராஜ் தான் நேரதனக்கு உதவியதாக கூறியுள்ளார் இதையடுத்து இன்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருந்தாளுநர் கோவிந்தராஜுவை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் பின்னர் அவரை தேனி மாவட்ட சிபிசிஐடி காவல் துறையிடம் ஒப்படைத்தனர் தற்போது கோவிந்தராஜனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதற்கிடையில் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் வேதாச்சலம் மூலம் தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மோசடியாக ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது பொதுமக்களின் உயிரை காப்பாற்றும் மருத்துவ படிப்புகளில் இதுபோன்று முறைகேடு சம்பவங்கள் அரங்கேறி இருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.