வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, அவருடைய தாயார் உடல் நலத்தைக் காரணம் காட்டி விண்ணப்பித்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக பரோல் வழங்கப்பட்டது.
இதுவரை நளினிக்கு நான்கு முறை பரோல் நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தனக்கு 30 நாட்கள் பரோல் நீட்டிக்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு நளினி கோரிக்கை வைத்திருந்த நிலையில், அவருக்கு அடுத்தடுத்து 4 முறை பரோல் நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள அவரது உறவினர் சத்தியவாணி என்பவர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், இன்று (மே 26) நளினிக்கு பரோல் முடிந்த நிலையில், நளினிக்கு 5ஆவது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது, தமிழ்நாடு அரசு 5ஆவது முறையாக நளினிக்கு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பரோல் நீட்டிக்கப்பட்ட நளினி பிரம்மபுரத்தில் தனது தாயார் பத்மாவுடன் தங்கியுள்ளார்.
இதையும் படிங்க: கணவர் முருகனை காண வேலூர் சிறைக்கு வந்த நளினி!