ETV Bharat / city

கண்ணாடித் துகள்கள் ஏற்றிச்சென்ற லாரி - மடக்கிப்பிடித்த எம்பி

சாலையில் பாதுகாப்பற்ற முறையில் கண்ணாடித் துகள்களை ஏற்றிச்சென்ற லாரியை மடக்கிப் பிடித்த எம்.பி கதிர் ஆனந்த், ஓட்டுநருக்கு அறிவுரைக்கூறி லாரியை காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

லாரி ஓட்டுநருக்கு தக்க பாடம் புகட்டிய திமுக எம்.பி

author img

By

Published : Aug 20, 2021, 8:11 PM IST

வேலூர்: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் இன்று (ஆக. 20) காலை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தனது காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அவருடைய காருக்கு முன் பெரிய லாரி ஒன்று நொறுங்கிய கண்ணாடித் துகள்களை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றுள்ளது.

ஓட்டுநருக்கு அறிவுரை

முன்னால் சென்ற லாரியில் வித்தியாசமான பொருள் ஏதோ சிதறி சாலையிலும், லாரிக்கு பின்புறம் வருபவர்கள் மீது விழுவதை கவனித்த எம்.பி கதிர் ஆனந்த், அந்த லாரியை முந்திச் சென்று மடக்கி ஓட்டுநரிடம் விசாரணை செய்தார்.

இது போன்று இனிமேல் அலட்சியமாக நடந்துகொள்ள வேண்டாம் என ஓட்டுநருக்கு அறிவுறுத்திய கதிர் ஆனந்த்

சாலையில் பாதுகாப்பற்ற முறையில் கண்ணாடித் துகள்களை ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநரை காவல் துறையிடம் ஒப்படைத்த திமுக எம்.பி கதிர் ஆனந்த்

அந்த லாரியில் நொறுங்கிய கண்ணாடித் துகள்கள் இருப்பதைக் கண்ட எம்.பி கதிர் ஆனந்த் "வாகன ஓட்டிகள் மீது கண்ணாடித் துகள்கள் பட்டால், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதை உணராமல் பொறுப்பற்ற முறையில் லாரியை வேகமாக ஓட்டிச் செல்கிறீர்களே" என லாரி ஓட்டுநருக்கு அறிவுறுத்தினார்.

மேலும், லாரியை ஓரமாக நிறுத்தி போலீசாரை அழைத்து ஒப்படைத்தார்.

'இது போன்று இனிமேல் அலட்சியமாக நடந்துகொள்ள வேண்டாம் என ஓட்டுநரிடம அறிவுரை கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: '2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை- செந்தில் பாலாஜி புகார்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.