ETV Bharat / city

காணாமல் போன சிறுவன் கழிவு நீர் கால்வாயில் இறந்த நிலையில் மீட்பு! - காணாமல் போன சிறுவன் கழிவு நீர் கால்வாயில் சடலமாக மீட்பு

வேலூர்: காணாமல் போன சிறுவன் கழிவு நீர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Missing boy found dead in sewage canal  Missing boy found dead in Vellore  Missing boy Dead  காணாமல் போன சிறுவன் கழிவு நீர் கால்வாயில் சடலமாக மீட்பு  கழிவு நீர் கால்வாய்
Missing boy found dead in Vellore
author img

By

Published : Dec 3, 2020, 9:03 PM IST

வேலூர் மாவட்டம், தோட்டப்பாளையம் மாதாகேவில் தெருவைச் சேர்ந்தவர்கள் கூலி தொழில் செய்யும் விஜயகுமார் - லட்சுமி தம்பதி. இவர்களது இளைய மகன் அஜய்குமார் (வயது 17). சிறிது மனநலம் பாதிக்கப்பட்ட அஜய்குமார் கடந்த 30 ஆம் தேதி இரவு 11.00 மணி அளவில் காணாமல் போனார்.

இது குறித்து அஜய்குமாரின் பெற்றோர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், இன்று (டிச. 03) மாலை காகித பட்டறை எல்.ஐ.சி காலனி வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக காவல் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அது காணாமல் போன அஜய்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அஜய்குமாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் ஒரே பகுதியில் காணாமல்போன 4 சிறார்கள்: ஒரேநாளில் மீட்ட காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.