ETV Bharat / city

முறையற்ற பத்திரப்பதிவு செய்யப்பட்டால் உடனடியாக நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி - vellore

முறையற்ற வகையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மூர்த்தி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, minister moorthy
minister moorthy pressmeet in vellore
author img

By

Published : Jul 1, 2021, 10:33 PM IST

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் வேலூர், கடலூர் மண்டல பணி சீராய்வு கூட்டம் இன்று (ஜூலை 01) பிற்பகல் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் இறுதியில் செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர், "முறையற்ற வகையிலே பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தால் உடனடியாக பத்திரப்பதிவு செய்த அலுவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நிர்வாகத்தை செப்பனிடுகிறோம்

துறை ரீதியாக இதுபோன்ற தவறுகள் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக, இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பதிவுத்துறை நிர்வாகத்தை செப்பனிடுவதற்காக ஒரே நேரத்தில் மாநில அளவிலும், மண்டல ரீதியாகவும் இருக்கக்கூடிய பதிவுத்துறை துணை தலைவர், கூடுதல் பதிவுத்துறை தலைவர் போன்றோரை மாற்றி, நிர்வாகத்தில் சில மாற்றங்களைச் செய்து இருக்கிறோம்.

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு

எளிமையான உறுப்பினர் சேர்க்கை

மேலும், பதிவாளர்கள் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களை உடனே மாற்றம் செய்தும், ஒரு சிலரை உடனடியாக பணியிடை நீக்கமும் செய்துள்ளோம். சிறு குறு வியாபாரிகளின் வணிகர் நல வாரியத்திற்கான உறுப்பினர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் செய்யும் வகையில் எளிமையாக்கி உள்ளோம்.

அது மட்டுமின்றி, கிராமப்புறங்களில் உள்ள இ-சேவை மையங்களின் மூலமாகவும் உறுப்பினர் சேர்க்கைக்கு வழிவகை செய்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: 'வணிகர்கள் வரியைத் தவறாமல் செலுத்த வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.