வேலூர்: குடியாத்தம் அடுத்த கணவாய் மோட்டூர் கிராமத்தில் சுகுமார் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை சுந்தரம் என்பவர் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகிறார். விவசாய நிலத்தில் வனவிலங்குகளை வேட்டையாட கம்பி வேலிகளை அமைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அக்கம்பிவேலியில் சிக்கி ஆண் மற்றும் பெண் மான்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனையடுத்து உயிரிழந்த அந்த மான்களின் இறைச்சியை விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் விரைந்து சென்ற குடியாத்தம் வனத்துறையினர் சுந்தரத்தை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் இருந்த சுமார் 50 கிலோ மான் கறி மற்றும் இறைச்சியிட பயன்படுத்திய ஆயுதங்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய நிலத்தில் இரும்பு கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்த இரண்டு மான்கள் வெட்டி இறைச்சியாக விற்ற சம்பவம் விலங்கியல் ஆய்வாளர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, வனத்துறையினர் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வன விலங்குகள் பாதுகாக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டில் உயிரிழந்த தந்தை - உடலை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மகள் கோரிக்கை