ETV Bharat / city

'சட்டவிரோதமாக மணல் அள்ளும் தனியார் நிறுவனம்' - 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணை! - sand mining

மதுரை: இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணியில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

உயர்நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Sep 24, 2019, 10:09 AM IST

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் 'ரயில்வேயில் நடக்கும் மேம்பாட்டுப் பணிகளை ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சில பணிகளைத் தனியாரிடம் ஒப்படைத்து பணிகள் நடைபெறுகின்றன.

அப்போது மதுரை - வாஞ்சி, மணியாச்சி - தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் வழிப்பாதை அமைக்கும் பணிகள் சுமார் ரூ.170 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. அதில் திருமங்கலம் அருகே இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றான். இந்நிலையில், பணியை ஒப்பந்த முறையில் செய்து வரும் தனியார் நிறுவனம், சில கண்மாய்களில் அனுமதியின்றி மணல் அள்ளுகிறார்கள்.

இதனால் அப்பகுதில் உள்ள நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது. இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் அனுமதியின்றி மணல் அள்ளுவது தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதேபோல் சட்ட விரோதமாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மணல் அள்ளுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து விளக்கமளிக்க மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:

உயிரைப் பணயம் வைத்து மகளை மீட்ட தந்தை! - திருச்சி அருகே பரபரப்பு!

Intro:மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணியில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மதுரை,விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
Body:மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணியில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் மதுரை,விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கிருஷ்ணன் எனபவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்,
அதில் " ரயில்வேயில் நடக்கும் மேம்பாட்டு பணிகளை ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.சில பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கபட்டு பணிகள் நடைபெறும்.அப்போது மதுரை-வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி வரையிலான இரட்டை தண்டவாளம் வழிப்பதை அமைக்கும் பணிகள் சுமார் ரூ.170 கோடி மதிப்பில் நடைபெற்றுவருகிறது. அதில் திருமங்கலம் அருகே இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பணியை ஒப்பந்த முறையில் செய்து வரும் தனியார் நிறுவனம்,சில கண்மாய்கள் அனுமதியின்றி மணல் அள்ளுகிறார்கள். இதனால் அப்பகுதில் உள்ள நீர்நிலைகள் பாதிக்கப்படுகிறது. இரட்டை தண்டவாளம் அமைக்கும் பணியில் தனியார் நிறுவனம் அனுமதியின்றி மணல் அள்ளுவது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதேபோல் சட்ட விரோதமாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம்,தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து மதுரை,விருதுநகர்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.