உலகமெங்கும் கரோனா வைரசின் தாக்கம் அதிகமாகிவருகிறது. இந்தக் கரோனா வைரசைத் தடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகளும், சுகாதாரத் துறை, அரசு ஊழியர்களும் இரவு-பகல் பாராமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் குடியாத்தம் பகுதிகளில் உள்ள பெண்கள் கரோனா வைரசிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வீடுகளின் முன்பு வேப்பிலைகளைத் தோரணங்களாகக் கட்டியும், மஞ்சள்நீரை தங்கள் வீட்டின் முன்பு தெளித்தும் அசத்திவருகின்றனர்.
இதையும் படிக்க:கன்னியாகுமரியில் இருவருக்கு கரோனா அறிகுறி