ETV Bharat / city

வேலூரில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் கைது? - vellore police department

மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று கூறப்படும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரை, அம்மாநில காவல் துறையினர் இன்று (டிசம்பர் 17) வேலூரில் கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர்
author img

By

Published : Dec 17, 2021, 7:46 PM IST

வேலூர்: சிஎம்சி மருத்துவமனையில் ஜார்கண்ட் மாநிலம் லத்தேஹர் கிராமத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் யாதவ் (54), கடந்த 11ஆம் தேதிமுதல் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

ராம்பிரசாத் யாதவிற்கு உதவியாக அவரது மகன் வீரேந்திர குமார் யாதவ் (34) இருந்துவந்தார். மாவோயிஸ்ட் ஆதரவாளர் எனக் கூறப்படும் வீரேந்திர குமார், வேலூரில் இருக்கும் தகவலை அறிந்துகொண்ட ஜார்கண்ட் மாநிலம் லத்தேஹர் காவல் நிலைய ஆய்வாளர் பபுல்குமார் தலைமையிலான காவலர்கள் இன்று கைதுசெய்தனர்.

விசாரணை

வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வீரேந்திர குமாரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவரை ஜார்கண்ட் அழைத்துச்செல்ல உள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் தேடப்பட்டுவந்த நிலையில், வீரேந்திர குமார் வேலூரில் இருப்பதை செல்போன் சிக்னல் உதவியுடன் ஜார்கண்ட் காவல் துறையினர் கண்டறிந்த நிலையில் வேலூர் வந்து கைதுசெய்துள்ளனர்.

ஆனால், ஜார்கண்ட் லத்தேஹர் காவல் நிலைய ஆய்வாளர் பபுல்குமார் கூறுகையில், "கைதுசெய்யப்பட்ட நபர் அன்சு குமார், அவர் லத்தேஹர் காவல் நிலையத்திற்குள்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் அவரை வேலூர் வந்து கைதுசெய்தோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிவசங்கர் பாபா மீது தொடரும் புகார்கள்: பிணை தர நீதிமன்றம் மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.