ETV Bharat / city

சிறுமியின் உயிரிழப்புக்கு நானும் பொறுப்பு - மாவட்ட ஆட்சியர் - district collector meeting

வேலூர்: டெங்குவை ஒழிக்க துப்புரவு பணியாளர்களுக்கான பயிற்சி முகாமில், டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்ததற்கு நானும் பொறுப்பேற்று கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Oct 17, 2019, 11:18 PM IST

வேலூர் மாவட்டத்தில் டெங்குகாய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், நேற்று முன்தினம் நட்சத்திரா என்ற நான்கு வயது சிறுமி, டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, டெங்கு பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம், பல்வேறு சுகாதார பணிகளில் ஈடுபட்டுவருகிறது.

இதனிடையே, டெங்கு கொசுக்கள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவுப் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாமில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு பேசினார். அப்போது “டெங்குவால் சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நான் உட்பட அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு கூட்டம்

மேலும் அவர் பேசும்போது, “நீங்கள் அனைவரும் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்யும்போது, உரிமையாளரிடம் அனுமதி பெற்று வீட்டினுள் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஒருவேளை டெங்கு கொசு லார்வாக்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் 5% டெங்கு கொசுக்கள் கண்டறியப்பட்டால் அந்த பகுதியை அபாயகரமானதாக அறிவிக்கவேண்டும்” எனக் கூறினார்.

Intro:வேலூர் மாவட்டம்

டெங்குவை ஒழிக்க துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்
- சிறுமி உயிரிழப்புக்கு நானும் பொறுப்பு ஏற்கிறேன் மாவட்ட ஆட்சியர் பரபரப்பு பேச்சுBody:வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று முன்தினம் நட்சத்திரா என்ற 4 வயது சிறுமி ஒருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இதையடுத்து மேலும் டெங்கு பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகிறது இந்த நிலையில் டெங்கு கொசுக்கள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு பணியாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாமில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்துகொண்டு பேசினார் அப்போது அவர் பேசுகையில் டெங்குவால் சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நான் உட்பட அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் அவர் பேசும்போது நீங்கள் அனைவரும் வீடுவீடாக சென்று ஆய்வு செய்யும்போது உரிமையாளரிடம் அனுமதி பெற்று வீட்டினுள் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி ஆகிறதா என்பதை தீவிர ஆய்வு செய்ய வேண்டும் ஒருவேளை டெங்கு கொசு லார்வாக்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் மேலும் 5% டெங்கு கொசுக்கள் கண்டறியப்பட்டால் அந்த பகுதியை அபாயகரமானதாக அறிவிக்கவேண்டும் வெட்டுவானம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுமி உயிரிழந்த மிகவும் வேதனைக்குரியது அந்த சிறுமிக்கு முதலில் காய்ச்சல் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது டெங்கு காய்ச்சல் இருப்பதை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவர்கள் சரிவர டெங்கு சிகிச்சை அளிக்காத நிலையில் மற்றொரு பிரபல தனியார் மருத்துவனையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டார் அதன் காரணமாக அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து உயிரிழக்க நேரிட்டது அந்த சிறுமி பயின்ற பள்ளி மற்றும் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது துப்புரவு பணியாளர்களுக்கு தெரிந்துள்ளது ஆனாலும் அங்கு டெங்கு கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவே இந்த சம்பவத்தில் நான் உட்பட அனைவரும் சிறுமியின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவே இதுபோன்று உயிரிழப்பை தடுக்க நீங்கள் அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் டெங்கு ஒழிப்பு விவகாரத்தில் மனிதாபிமானம் காட்டாமல் கண்டிப்புடன் செயல்படுங்கள் என்று பரபரப்பாக பேசினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.