வேலூர்: கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் பாலாற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. இப்பெருவெள்ளம் காரணமாக விரிஞ்சிபுரம்-காமராஜபுரம் இடையே ஓடும் பாலாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தின் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் வேலூர், பொய்கை, விரிஞ்சிபுரம், செதுவாலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கே.வி. குப்பம், வடுகன்தாங்கல், லத்தேரி, குடியாத்தம் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல சுமார் 50 கிலோமீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
தற்காலிகச் சீரமைப்பு
இந்நிலையில், தற்போது தற்காலிகமாக மண்ணை கொட்டி தரைப்பாலம் சரிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து மட்டும் தொடங்கியுள்ளது.
விரைவாக பாலத்தை முழுமையாகச் சீரமைத்து அனைத்து வகை போக்குவரத்தும் தொடங்க வழிவகை செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அண்ணா நகர், கலைஞர் நகர் வரிசையில் உதயா நகர்!