ETV Bharat / city

திடீரென ஏற்பட்ட தீ விபத்து: வீட்டுடன் எரிந்து சாம்பலான ரூ. 3.5 லட்சம் ரொக்கம்! - திருப்பத்தூர் மாவட்டத்தில் மின்கசிவால் தீ விபத்து

திருப்பத்தூர்: மின் கசிவின் காரணமாக சிலிண்டர் வெடித்து குடிசை வீடு எரிந்ததில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், ஐந்து பவுன் தங்க நகை என மொத்த சொத்தும் கருகியதால் குடும்பமே தவித்துவருகிறது.

மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு சாம்பலானது

author img

By

Published : Jan 27, 2020, 7:49 AM IST

திருப்பத்துார் அடுத்த கந்திலி ஒன்றியம் எறம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (47), பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு சங்கீதா என்ற மகளும் கணேஷன் (27), அருண்குமார் (24) என இரு மகன்களும் உள்ளனர். சங்கீதாவிற்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில், குடும்பத்தின் எஞ்சிய நான்கு பேரும் அவர்களின் குடிசை வீட்டில் வசித்துவந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு நான்கு பேரும் வீட்டிற்குள் இருந்தபோது சுமார் ஏழு மணியளவில் மின் கசிவு ஏற்பட்டதில் குடிசை வீடு தீப்பற்றியது. உடனே அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டைவிட்டு வெளியே ஓடினர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றபோது திடீரென பயங்கர சத்தத்துடன் குடிசை வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் சுற்றுச்சுவர் சுக்குநூறாக உடைந்து சிதறியது.

மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு சாம்பலானது

இந்த தீ விபத்தினால் புதியதாக வீடு கட்டுவதற்காக வீட்டில் வைத்திருந்த மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், நான்கு பவுன் தங்க நகைகள் உட்பட வீட்டில் இருந்த துணிமணிகள், மரச்சாமான்கள், சான்றிதழ்கள், வீட்டு பட்டா என அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. உடனே தகவலறிந்த திருப்பத்துார் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தினால் அருகில் இருந்த மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் லேசான தீ பரவி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பட்ஜெட் 2020: பொருளாதாரத்தை சரிசெய்ய மின் வாகன உற்பத்தியில் கவனம் தேவை

Intro:Body:

திருப்பத்தூர் அருகே மின் கசிவின் காரணமாக சிலிண்டர் வெடித்ததில் குடிசை வீடு எரிந்து சாம்பல் 3 லட்சத்து 50 ஆயிரம் பணம் 5 பவுன் தங்க நகை கருகியது....

திருப்பத்துார் அடுத்த கந்திலி ஒன்றியம் எறம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(47) கூலி தொழிலாளி.இவரது மனைவி பார்வதி இவர்களுக்கு சங்கீதா என்ற மகள் கணேஷன்(27), அருன்குமார்(24). என இருமகன்கள் உள்ளனர்.

சங்கீதாவிற்கு திருமணம் ஆனதால் அவளை தவிர மற்ற 4 பேரும் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆறுமுகத்தின் மனைவி மற்றும் மகன்கள் உட்பட 4 பேரும் வீட்டிற்குள் இருந்தபோது இரவு 7மணியளவில் மின் கசிவு ஏற்பட்டதில் குடிசை வீடு தீப்பற்றியது உடனே அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலரி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

உடனே அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றபோது திடீரென பயங்கர சத்தத்துடன் குடிசை வீட்டில் இருந்து சிலிண்டர் வெடித்ததில் சுற்றுச்சுவர் சுக்குநுாறாக உடைந்து சிதறியது.

இந்த தீ விபத்தினால் புதியதாக வீடு கட்டுவதற்காக வீட்டில் வைத்திருந்த ரூ 3 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 4 பவுன் தங்க நகை உட்பட வீட்டில் கிடந்த உணவு பொருட்கள், துணிமணிகள், மரச்சாமான்கள், சான்றிதழ்கள், வீட்டு பட்டாக்கள், என அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

உடனே தகவலறிந்த திருப்பத்துார் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்

இந்த தீ விபத்தினால் அருகில் இருந்த மூன்றுக்கும் மேற்பட்ட லேசான தீ பரவி வீடுகளில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டி; ஆறுமுகம் வீட்டின் உரிமையாளர்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.